பிரேசில் மினாஸ் ஜெராயிஸ் நகரின் பிரதான வீதியில் வங்கி கிளைகள், ATM நிலையங்கள் உள்ளன.
அங்கு பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் வங்கிகளுக்குள் செல்ல முற்பட்டது.
தகவலறிந்த பொலிஸார் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொள்ளையர்களும் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 25 கொள்ளையர்கள் பலியானதாக கூறப்படுகிறது.
இது போல் கடந்த ஆண்டு வங்கி கொள்ளையர்கள் ஓகஸ்ட் மற்றும் டிசம்பரில் வங்கி ஊழியர்களை பிணையை கைதிகளாக வைத்து கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டது.