வைத்திய சேவை தவிர்ந்த, தாதியர் உள்ளிட்ட 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (24) முதல் 48 மணிநேர பணிப் பகிஷ்கரிப்பை
முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.இன்று (24) காலை 07 மணி முதல் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவிக்கின்றார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்திய கட்டமைப்பு மற்றும் பொது சுகாதார சேவை ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த பணிப் பகிஷ்கரிப்பில் இணைந்துக் கொள்ளவுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இதேவேளை, 7 கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 50,000 பேர் இந்த பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.