Our Feeds


Thursday, November 11, 2021

SHAHNI RAMEES

பிரான்ஸில் தலைத்தூக்கும் கொரோனா | 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்தையும் தாண்டிய தொற்று!

 

பிரான்ஸில்  24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள், மருத்துவமனை மற்றும் மரண விபரங்களை Santé Publique France என்று செய்தி தளம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி,  இதுவரை  பிரான்சில் 72 இலட்சத்து 44 ஆயிரத்து 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களில் 11 ஆயிரத்து 883 பேர் இந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொற்று வீதம் 3,1% ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் 6, 906 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 1, 154 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 24 மணிநேரத்தில் 33 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.  மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11 இலட்சத்து 8 ஆயிரத்து 56 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 91 ஆயிரத்து 159 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »