நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை (22) முதல் ஆரம்பமாகின்றன.
இதன்படி, 6ம் தரம் முதல் 9ம் தரம் வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகளே நாளை (22) ஆரம்பமாகின்றன.
முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரையான வகுப்புக்களுக்கும், 10ம் தரம் முதல் 13ம் தரம் வரையான வகுப்புக்களுக்கும் ஏற்கனவே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், நாளை (22) முதல் அனைத்து வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
இதேவேளை, தடிமன், இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.