அமெரிக்காவில் பேரணியொன்றில் பங்குபற்றியவர்கள் மீது வாகனமொன்று புகுந்ததால் பலர் உயிரிழந்ததுடன் 20 இற்கும்
அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விஸ்கொன்சின் மாநிலத்தின் வாகீசா நகரில் உள்ளூர் நேரப்படி ஞாயிறு மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முல்வாவ்கீ நகரின் அருகிலுள்ள வாகீசா நகரில் வருடாந்த நத்தார் பேரணியொன்றிலேயே மேற்படி வாகனம் புகுந்துள்ளது.
பொலிஸ் அதிகாரி டேன் தொம்சன் இதுதொடர்பாக கூறுகையில், ‘சிவப்பு நிற ரக வாகமொன்று தடைகளை மீறி நுழைந்தது, இச்சம்பவத்தில் 20 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலர் சிறார்கள் ஆவர். இச்சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்’ எனத் தெரிவித்தார்.