அக்கரப்பத்தனை, பசுமலை அப்பர்கிரேன்லி தோட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக 2 வீடுகளின் பின்பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதனால் 2 வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சமயலறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளது.
அத்தோடு குடியிருப்பு பகுதிகளில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களை சேர்ந்த 8 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
மேலும், இப்பகுதியில் உள்ள 15 வீடுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களுக்கு மாற்று நடவடிக்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பாதிக்கபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
-மலையக நிருபர் கிரிஷாந்தன்-