போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 19 வயதான இளம் பெண் ஒருவர், காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்லாகம் பகுதியை சேர்ந்த சந்தேகநபரான குறித்த பெண்ணின் கணவர் என அறியப்படும் நபர், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் ஆவார்.
இவர் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருந்த நிலையில், பொலிஸார் அவரை தேடியதாகவும் பின்னர் இருவரும் மல்லாகத்தில் இருந்து வெளியேறி தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியில் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், கடந்த பல நாள்களாக சந்தேகநபர்களை கண்காணித்து வந்த நிலையில், நேற்று (04) மாலை, குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.