சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரு சீமெந்து பொதியின் விலையை 177 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
அதன்படி, ஒரு சீமெந்து பொதியின்புதிய விலை 1,275 ரூபா ஆகும்.
இதற்கு முன்னர் ஒரு சீமெந்து பொதியின் விலை 1,098 ரூபாவாக காணப்பட்டது.
கடந்த ஒக்டோபர் தொடக்கத்தில் சீமெந்து பொதியொன்றின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,093 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.