மேல், வட மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் ஒரு சில பிரதேசங்களிலும் இன்று (08) 150 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மாத்தளை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் ஒரு சில பிரதேசங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என அந்த திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.
இதேவேளை, நாட்டின் அநேகமான பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகலாம். அநேகமான பிரதேசங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருக்கும்.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படகூடிய கடுமையான காற்று மற்றும் மின்னல் என்பவற்றால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் கோரியுள்ளது.