அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் 15 வயது சிறுமியை 7 மாத கர்ப்பிணியாக்கிய சந்தேகத்தில் தேடப்படும் உறவினர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சிறுமியின் உறவினர் இருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தெரிவித்தார்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சிறுவர் பிரிவு பொலிஸார் விசாரணையை மேற்கொண்ட நிலையில் சிறுமியை கர்ப்பமாக்கியதாகக் கூறப்படும் சிறுமியின் உறவினர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்த நிலையில் தலைமறைவாகிய சந்தேக நபரை பொலிஸார் தேடி வருவதுடன் குறித்த சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள உடந்தையாகவிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் சிறுமியின் உறவினர்கள் இருவரையும் திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.