(ஆர்.யசி)
நாடளாவிய கொரோனா வைரஸ் பரவல் நிலைமைகள் குறித்த புதிய தரவுகள் தொடர்பிலும், அடுத்தகட்ட சவால்கள் குறித்தும் தெளிவுபடுத்தும்போதே அவர்கள் இதனை கூறினர்.
இது குறித்து சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்த்தன கூறுகையில்,
நாட்டில் மீண்டும் வேகமாக கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது, நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் செயற்பாடுகள் பொறுப்பற்ற விதத்தில் அமைந்துள்ளமையே இதற்கு காரணமாகும். அதேபோல் தடுப்பூசி ஏற்றிவிட்டோம் என்ற எண்ணப்பாட்டில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறுகின்றமை அதிகமாக அவதானிக்கப்பட்டுவரும் ஒரு காரணியாகும்.
தடுப்பூசி ஏற்றினாலும், எத்தனை தடவை ஏற்றிக்கொண்டாலும் அவற்றை விடவும் வைரஸின் வீரியம் அதிகமானது என்பதையே நாம் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வருகின்றோம். நாம் தடுப்பூசி ஏற்றிவிட்டோம் என்பதற்காக வைரஸ் தொற்று பரவாமல் இருக்கப்போவதில்லை.
எமது செயற்பாடுகள் காரணமாக வைரஸ் ஏனையோருக்கு பரவும் சாத்தியப்பாடுகள் அதிகமாகும். எனவே பொதுமக்கள் மிகக் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.