அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (15) இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின்போது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படும் 11 பங்காளி கட்சிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளன.
இதேவேளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ,அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான விமல் வீரவன்ச, வாசு தேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனா்