Our Feeds


Monday, November 8, 2021

SHAHNI RAMEES

அனர்த்த நிலைமை ஏற்பட்டால் 117 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்

 

நாட்டின் 12 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீரற்ற வானிலை காரணமாக 1,143 குடும்பங்களைச் சேர்ந்த 4,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளடன் 635 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

5 மரணங்கள் பதிவாகியுள்ளன. ஒருவர் காணாமல் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ,இனிவரும் தினங்களில் ஏற்படக்கூடிய எந்தவொரு வானிலை அனர்த்தத்திற்கும் முகம்கொடுப்பதற்காக மத்திய நிலையம் தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையப் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்க முடியும். இது 24 மணி நேரமும் செயற்படுவதாக பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »