அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் , வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் இல்லத்தில் சந்தித்து நாளை (15) முக்கிய கலந்துரையாடலொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறியமுடிகிறது.
2022 ஆம் ஆண்டுக்கான சமர்ப்பிக்கப்பட்டு வரவு செலவுத் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் இதன்போது பரந்துப்பட்ட பேச்சுவார்ததை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அமெரிக்க நிறுவனமொன்றுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தம் தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.