Our Feeds


Sunday, November 14, 2021

SHAHNI RAMEES

வவுனியாவில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி

 


வவுனியா வடக்கு வலய பாடசாலை ஒன்றில் 10 மாணவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு வலயத்துக்குட்பட்ட மறவன்குளம் பாரதி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 5 மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குறித்த மாணவனுக்கு நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து குறித்த மாணவனுடன் தொடர்புடைய ஏனைய மாணவர்களுக்கு இன்று துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பரிசோதனையில் அந்தப் பாடசாலையைச் சேர்ந்த தரம் 5 மாணவர்கள் 7 பேருக்கும், தரம் 11 மாணவர்கள் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான மாணவர்கள் சிகிச்சைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »