Our Feeds


Thursday, November 25, 2021

SHAHNI RAMEES

100 கோடி பெறுமதியான இரத்தினக்கல் கண்டுப்பிடிப்பு

 

இலங்கையில் மிகவும் அரிய வகையைச் சேர்ந்த இயற்கையான

பெனகைட் இரத்தினக்கல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேருவளை பகுதியை சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரியான மொஹமட் பஸ்ரீன் நஸீர் என்பவர் பலாங்கொடையில் இருந்து குறித்த இரத்தினக்கல்லை கொள்வனவு செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இரத்தினக்கல்லின் எடை 616.90 கரட் எனவும் இதன் பெறுமதி சுமார் 100 கோடி ரூபா எனவும் குறித்த வர்த்தகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது தொடர்பில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க கூறுகையில் இந்த இரத்தினக்கல்லானது மிகவும் அரிதானது என்பதால் விலை உயர்ந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »