அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து எதிர்வரும் 09ம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியத்தினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தை தொடர்ந்தும் தாம் முன்னெடுப்பதாக சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.
பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை மாத்திரதே தாம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
அதைவிடுத்து, வேறு எந்தவொரு செயற்பாடும் ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
7.30 முதல் 1.30 வரை மாத்திரமே தமது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், கொழும்பு – லிப்டன் சுற்று வட்டத்தில் எதிர்வரும் 9ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.