Our Feeds


Thursday, October 21, 2021

ShortNews Admin

எனது WhatsApp அழைப்புக்களை CID ஒட்டுக்கேட்டுள்ளது - சம்பிக்க பாரிய குற்றச்சாட்டு - VIDEO



குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தனது வாட்ஸ்அப் அழைப்புகளைப் பதிவு செய்ததாக சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.


சமீபத்தில் தான் வாட்ஸ்அப் இல் பேசிய உரையாடல்கள் குறித்து சிஐடியால் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்

ஆனால் வாட்ஸ்அப் அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் தொழில்நுட்பம் இலங்கையில் இல்லை என்றும் ரணவக்க குறிப்பிட்டார். இருப்பினும் வாட்ஸ்அப் அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் தொழில்நுட்பத்தில் சிஐடி கை வைத்திருப்பதாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.

சம்பிக்க ரணவக்க கடந்த மாதம் சிஐடி முன்பு ஆஜரானார் அப்போது அவரிடம் முன்னாள் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தபோது செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது

சிஐடியால் விசாரிக்கப்பட்ட போது 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அவரது தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டது தெரியவந்தது என்று ரணவக்க கூறினார்.

நீதிமன்ற உத்தரவின் மூலம் மட்டுமே தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »