தனக்கு முஸ்லிம் மக்களுடன் எந்த தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறினார்.
தனியார் வானொலி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறி உள்ளார்.
“அல்லாஹ்வுக்கு பிறகு நாம் வணங்கும் கடவுள் சரத் வீரசேகர என அம்பாரை மாவட்டத்தில் உள்ள சில முஸ்லிம்கள் என்னிடம் கூறி உள்ளனர். நான் அவ்வாறே அவர்களுக்கு உதவி ஒத்தாசையாக இருந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என ஞானசார தேரர் கூறிய விடயத்தை மேற்கோள் காட்டி முஜிபுர் றஹ்மான் கேட்ட கேள்விக்கு தான் விடையளித்த விடயம் திரிபுபடுத்தப்பட்டு சமூகமயப்படுத்தப்படுள்ளதாக அவர் மேலும் கூறி உள்ளார்.
ஐ எஸ் ஐ எஸ் கொள்கை உள்ளவர்கள் இருக்கும் வரை எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்று தான் கூறியதாக குறிப்பிட்டுள்ள அவர்,ஐ எஸ் அதாவது “இஸ்லாமிக் ஸ்டேட்” கொள்கையை கொண்டிருப்பவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களை கொலை செய்தால் சுவர்க்கம் செல்ல முடியும் என நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஷெங்கிரில்லா ஹோட்டலில் குண்டு வைத்து தற்கொலை செய்துகொண்ட இப்ராஹிம் என்பவரின் புதல்வர்கள் பணக்காரர்கள் படித்தவர்கள் அவர்களையே இந்த கொள்கையால் ஈர்க்க முடிந்தது என்றால் சாமாண்ய முஸ்லிம் வாலிபர்களை இந்த கொள்கையால் ஈர்ப்பது பெரிய விடயமல்ல.எனவே தான் “இஸ்லாமிக் ஸ்டேட்” கொள்கை உள்ளவர்கள் தொடர்பில் நாம் கவணம் செலுத்த வேண்டும் என நான் கூறினேன்.