அம்பாறை மாவட்டம் நிந்தவூர் முதலாம் பிரிவைச் சேர்ந்த MJ.பாத்திமா அனத் ஜிதாஹ் உலக சாதனை படைத்து சர்வதேச சாதனை புத்தகத்தில் (International Book of Records) தனது பெயரை பதிவு செய்து தனது பொற்றோர்களுக்கும், நாட்டுக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார் .
ஆசிய நாடுகளின் கொடிகளையும், நாடுகளின் பெயர்களையும் மிக வேகமாக அடையாளம் காணக்கூடியவர் (Fastest to Identify Flags and Recite Names of all Asian Countries by Kid) எனும் முதலாவது உலக சிறுமி எனும் அந்தஸ்தை தனதாக்கிகொண்டார்.
அனைத்து 48 ஆசிய நாடுகளின் கொடிகளையும் வெறும் 24 வினாடிகளில் வேகமாக அடையாளம் கண்டு ஆசிய சாதனை புத்தகத்தில் ஏற்கனவே தன் பெயரை பதிவு செய்த இச்சிறுமி அண்மையில் உலக சாதனைக்கு விண்ணப்பித்ததுடன் இவரது திறமையை பரிசீலனை செய்து உலக சாதனை சிறுமியாக தமது இணையத்தளத்தில் வெளியிட்டதுடன் ஒரு சில வாரங்களுக்குள் இவருக்கான பரிசில்கள், பதக்கங்கள் வழங்கி கொளரவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சாதனைக்கான இவ் சாதனையை 23 வினாடிகளில் நிகழ்த்தியுள்ளார்.
(Sky Tamil)