அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக மாற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகில் இது போன்ற அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறையாகும்.
அறுவை சிகிச்சையின் நோயெதிர்ப்பு அமைப்பு புதிய சிறுநீரகத்திற்கு வெற்றிகரமாக பதிலளிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நுட்பத்தின் மேலதிக வளர்ச்சியானது உலகளாவிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் தற்போதைய கடுமையான பற்றாக்குறையை நீக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ராய்ட்டர் செய்திச் சேவையிடம் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், பன்றியின் சிறுநீரகத்தை மூளைச்சாவு அடைந்த ஒருவருக்கு பொறுத்தி பரிசீளித்ததாகவும், குறித்த நபர் மரணிப்பதற்கு முன்னர் இந்த பரிசோதனை மேற்கொள்வதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.
மூன்று நாட்களுக்கு, சிறுநீரகம் இரத்த நாளங்களுடன் இணைக்கப்பட்டு அவரது உடலுக்கு வெளியே பராமரிக்கப்பட்டது.
ஆய்வுக்கு தலைமை தாங்கிய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராபர்ட் மாண்ட்கோமெரி, மாற்று சிறுநீரகத்தின் செயல்பாடு குறித்த சோதனைகளின் முடிவுகள் சாதாரணமாக இருப்பதாக கூறினார்.