ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தற்போதைய ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்துவதில்லை என தௌிவாகியுள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தின தாக்குதல் இடம்பெற்று 30 மாதங்கள் கடந்துள்ள நிலையில், இன்று (21) கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற விஷேட ஆராதனையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 30 மாதங்கள் கடந்துள் போதிலும் தாக்குதலின் சூத்திரதாரி யார் என இதுவரையில் இனங்காணப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு பிரிவில் உள்ள உயர் அதிகாரிகள் விசாரணைகளை மூடி மறைக்க முயற்சிப்பதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.