Our Feeds


Monday, October 4, 2021

ShortNews Admin

SHORT_BREAKING: முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கார்ட்டூனாக வரைந்து கேவலப்படுத்த முயன்று சர்சைக்குள்ளானவர் வீதி விபத்தில் உயிரிழப்பு



உலக முஸ்லிம்கள் தம் உயிரினும் மேலாக மதிக்கும், இறைவனின் இறுதி இறைத்தூதர் முகமது நபி (ஸல்) அவர்களை கார்ட்டூனாக வரைந்து கேவலப்படுத்த முயன்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 75 வயதுடைய லார்ஸ் வில்க்ஸ் (Lars Vilks) என்பவர், வீதி விபத்தில் மரணமடைந்தார்.


பொலிஸாரின் வாகனம் ஒன்றில் அவர் சென்று கொண்டிருந்தபோது, ஒரு ட்ரக்கில் மோதி விபத்து நடந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் அவருடன் சென்று கொண்டிருந்த இரு பொலிஸாரும் உயிரிழந்தனர்.


டென்மார்க் செய்தித்தாள் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முகமது நபி (ஸல்) அவர்களை கார்ட்டூன்களாக வெளியிட்டு கேவலப்படுத்த முயன்ற அடுத்த ஆண்டில், வில்க்ஸ் கார்ட்டூன் வரைந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.


2007-ஆம் ஆண்டில் இந்த கார்ட்டூன் வரையப்பட்டபோது உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பாரிய எதிர்ப்புத் தெரிவித்தனர்.


அல் – கொய்தா இயக்கம் அவரது உயிருக்கு 01 லட்சம் டொலர் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »