மத வழிபாட்டுத் தலங்களில் 50 பேருடன் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய சமய அனுஷ்டானங்களை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்குவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி கோவில்கள், விகாரைகள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் 50 பேரை உள்ளடக்கி மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.