உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு நபரையும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச்செல்ல அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இது குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இது குறித்து சட்டமா அதிபர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்றும் பிரதமர் தெரிவித்தார்.