Our Feeds


Monday, October 18, 2021

Anonymous

#SHORT_BREAKING: நான் ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த போது தற்கொலை தாக்குதல் நடந்தமைக்கு வேதனையடைகிறேன்.

 



(எம்.ஆர்.எம்.வசீம்)


உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நானும் உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


பொலன்னறுவை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கவேண்டும். அந்த தாக்குதல் இடம்பெற்றது தொடர்பாக எனக்கும் பெரும் கவலை உள்ளது. ஏனெனில் எனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் கவலைககரமான சம்பவம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலாகும்.

குறித்த தாக்குதல் சம்பவமானது நான் நாட்டின் ஜனாதிபதியாக, பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிலையில் இடம்பெற்றதையிட்டு மிகவும் வேதனையடைகின்றேன்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த விடயங்கள் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »