உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீன் எம்.பி. மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சாட்சி இல்லாவிட்டால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க இன்று (04) சபையில் கோரிக்கை முன்வைத்தாா்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றாா்.
அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சி இருக்குமாக இருந்தால் அதனை சமர்ப்பிக்க வேண்டும். சாட்சி இல்லாவிட்டால் அவர் மீதான விசாரணையை நிறைவு செய்து அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிய சாட்சிகள் இருந்தால் அவற்றை உறுதிப்படுத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினாா்.
இதுதொடர்பில் கவனம் செலுத்துவதாக சபாநாயகர் சபையில் தெரிவித்தார்.