நாட்டுக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்தவற்காக ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 72500 கோடி ரூபா) கடனுதவியாக பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்தார்.
அதற்கு மேலதிகமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிடம் இருந்து கடனாக பெறவுள்ளதாகவும், அது திறைச்சேரியின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இம்மாதத்துக்குத் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்தவற்கு தேவையான டொலர் பெறுமதியினை பெற்றுக் கொடுக்க மத்திய வங்கியின் ஆளுநர் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன்காரணமாக எதிர்க்கட்சியின் எரிபொருள் தட்டுப்பாடு கனவு பலிக்கப்போவது இல்லை என அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.