Our Feeds


Tuesday, October 19, 2021

Anonymous

SHORT_BREAKING: சட்டவிரோதமாக சொத்துகுவித்த 200 அரச அதிகாரிகள் தொடர்பில் CIDயினா் தீவிர விசாரணை

 



சட்டவிரோதமாக சொத்துகளை குவித்த அரசாங்க அதிகாரிகள் 200 பேர் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதன் பிரகாரம் 70 அதிகாரிகள் குறித்து முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


சட்டவிரோதமாக சொத்து சேர்க்கப்பட்டமை குறித்து பொலிஸ் தலைமையகத்துக்குக் கிடைத்த முறைப்பாடுகளை விசாரணை செய்யுமாறு பொலிஸ்மா அதிபரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சட்டவிரோத சொத்துசேர்ப்போர் தொடர்பில் விசாரணை செய்யும் பிரிவுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டோரில் பொலிஸ், சிறைச்சாலை, சுங்கம், மோட்டார் போக்குவரத்து, மதுவரி ஆகிய திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களைச் சேர்ந்தோரு உள்ளடங்குகின்றனர். அவர்களில் உயர்மட்ட அதிகாரிகள் மீதும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »