Our Feeds


Wednesday, October 6, 2021

Anonymous

PHOTOS: இலங்கை வந்துள்ள உலகின் மிகப்பெரும் சரக்குக் கப்பலின் சிறப்பம்சங்கள் என்ன? வசதிகள் என்ன?

 



கொழும்பு துறைமுகத்தின், கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தை  வந்தடைந்துள்ள MV EVER ACE கப்பலானது Evergreen Line’s 24,000 – TEU  வர்க்கத்தைச் சேர்ந்த  உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாகும்.


400 மீற்றா் நீளமும் 61.5 மீற்றா் அகலமும் கொண்ட இந்த கப்பல் 14. 5 மிற்றா் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த கப்பலானது 23 கடல் மைல் வேகத்தில் பயணிக்குத் திறன் கொண்டதாகும். இதேவேளை, 24,000 ஆயிரம் கொள்கலன்களைத்  தாங்கும் திறனையும் இந்த கப்பல் கொண்டுள்ளது.

இந்த கப்பலின் முழு தாங்குத்திறனில் மணித்தியாலத்துக்கு 22.6 (23) கடல் மைல் வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும்.  MV EVER ACE  கப்பல் ஆசியா – ஐரோப்பா வர்த்தக நடவடிக்கைகளுக்காக CEM  சேவையின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்த இந்தக் கப்பல் கிங்டோவா,  ஷாங்காய், திங்க்போ, தாய்போ, சென்டியன், ரொடர்டேம், ஹெம்பர்கே மற்றும் பீல்க்ஸ்டோச் ஆகிய துறைமுகங்களுக்கும் பயணித்துள்ளது.

Ever Ace கப்பல் பல்வேறு சுற்றுச்சூழல் நேயமுடைய தன்மைகளைக் கொண்டுள்ளதுடன், எரிபொருள் திறன் கொண்ட மூலோபாய திட்டங்களைக் கொண்டதாகவும் உள்ளது.

எவர் கிறீன் கப்பல் சேவையினை மேம்படுத்தும் நோக்கில் Ever Ace கப்பலுக்கு மேலதிகமாக ‘A” தரத்தைச் சேர்ந்த 12 கப்பல்களை Ever Ace சகோதர கப்பல்களாக  எவர் கிறீன் நிறுவனம் அதன்  சேவை வலைப்பின்னலில் இணைத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

இந்த கப்பலை வரவேற்கும் நிகழ்வில், அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, Evergreen Shipping Agency தனியாா் நிறுவனத்தின் உப தலைவர் முஷின் நிவ்லோன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனா்.

இந்த கப்பலுக்கு உலகிலுள்ள துறைமுகங்களில், 24 துறைமுகங்களுக்கு மாத்திரமே செல்ல முடியும் என்பதுடன் ஆசியாவில் நங்கூரமிடுவதற்கான வாய்ப்பு கொழும்பு துறைமுகத்துக்கு மாத்திரம் இருப்பது சிறப்பம்சமாகும்.










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »