Our Feeds


Wednesday, October 20, 2021

Anonymous

PHOTOS: பௌத்த பிக்குகள், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுடன் இந்தியாவின் குஷி நகருக்கு பயணித்த விசேட விமானம் குஷி நகரை சென்றடைந்தது.

 



இந்தியாவின் 29ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் விமான நிலையம் இன்று (20) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.


இந்திய பிரதமர் நிரேந்திர மோடியினால் இந்த விமான நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதுடன், இந்த திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விசேட விருந்தினா்களாக  இலங்கையைச் சேரந்த சிலரும் பங்குப்பற்றவுள்ளனா்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் 100 பௌத்த மத குருமார்கள் உள்ளிட்ட குழுவினா் இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக புரப்பட்டுச் சென்றுள்ளனா்.

குஷிநகர் விமான நிலையம் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்கான முதலாவது விமானமாக யூல்.எல். 1147 என்ற விமானம் இன்று காலை 5.20 மணியளவில் இலங்கையிலிருந்து பயணித்தது.

மஹாசங்கத்தினர் வஸ்கடுவ கபிலவஸ்து புனித சின்னங்கள் சகிதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய உயர்தானியரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்து பயணித்த குறித்த விமானம் தற்போது குஷி விமான நிலையத்தை அடைந்துள்ளது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »