பல்வேறு தரப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடல் நிகழ்வொன்று இன்று (06) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை மின்சார சபை, துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டதோடு அதன்படி, நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், ஐக்கிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு, ஐக்கிய தொழிற் சங்கம், இலங்கை சுதந்திர தொழிற் சங்க கூட்டமைப்பு, தேசிய தொழிற் சங்கம் மற்றும் சுயேச்சையான தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்றன.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் திகாம்பரம், அமீர் அலி உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக அபேசிங்க, முஜிபுர் ரஹ்மான், வடிவேல் சுரேஷ் மற்றும் துஷார இந்துனில் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடிகள் குறித்து விரிவாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.