Our Feeds


Wednesday, October 13, 2021

Anonymous

PHOTOS: கனடாவின் உயரிய திண்மக் கழிவு தொழிநுட்பத்தை இலங்கையிலும் பயன்படுத்தும் முயற்சி - அக்குரணை பி.சபை தவிசாளர் இஸ்திஹார், கனடா சென்று விசேட கலந்துரையாடல்

 



அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் அவர்கள் கனடாவிற்கு உத்தியோகபூர்வ நல்லிணக்க விஜயமொன்றை மேற்கொண்ட பொழுது டொரொன்டோவிலுள்ள மார்க்ஹம் நகரின் மாநகர முதல்வர் பெரென்க்ஸ் கார்பிடியை சந்தித்து விஷேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


இதன் பொழுது கனடாவின் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பில் இரு தரப்பினரிடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. 


கனடா திண்மக் கழிவு முகாமைத்துவத்தில் உலகில் முன்னணி வகிப்பதற்கான முக்கிய காரணம் என்னவெனில் அங்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு மீள்சுழற்சி செயற்பாடுகள் மூலம் அவை மீளவும் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுவதேயாகும் . 


அதே வேளை அங்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் சாதாரணமாக இலங்கையில் பயன்படுத்தப்படும் முறையை ஒத்தே காணப்படுகின்றது. உதாரணமாக, பழைய உடைகளை அவர்கள் வீசுவதில்லை. சமூக பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்துகின்றனர். 


இவ்விடயம் இலங்கையிலுள்ள அக்குறணை பிரதேசத்திலும் எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது பற்றியும் இருதரப்பினரும் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். 


கவுன்சிலர் காலித் உஸ்மான் சூழல் முகாமைத்துவத்தின் சிரேஷ்ட முகாமையாளர் மார்சலிஸ், பேராசிரியர் இஸாக் சிராஸ், விவசாய தொழில்நுட்பவிலாளர் மசின் ஆகியோர் இந்த சந்திப்பின் போது கலந்து கொண்டனர்.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »