விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா சபை அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.
விலை அதிகரித்து மக்களிற்கு சுமையை ஏற்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் அவர் இன்று இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டார்.
இதன்போது, சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமயல் எரிவாயு சிலிண்டர்களை உடலில் சுமந்தும், கழுத்தில் தூக்கு கயிற்றினை அணிந்தும் தனது எதிர்ப்பினை இன்று வெளியிட்டார்.