இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
சற்றுமுன் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் மற்றும் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.