எம் உயிரும், வியர்வையும் இந்த சமூகத்திற்காகவே இருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹரீஸ் MP தெரிவித்துள்ளார்.
இந்த சமூகத்திற்கு ஏற்பட்ட அலுத்கமை, திகன போன்ற கலவரங்களின் போதெல்லாம் நாம் எப்படி செயல்பட்டோம் என்ற வரலாறு இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் தெரியாமல் பேசுகிறார்கள்.
வந்தான் வரத்தான் எல்லாம் இந்த சமூகத்தை பற்றி பேசக் கூடாது. என சாணக்கியன் MPக்கு இன்று பாராளுமன்ற அமர்வின் போது ஹரீஸ் பதிலளித்தார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்சியில் கலந்து கொண்டு ஞானசார தேரர் அல்லாஹ்தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி எனக் கூறியிருந்தார். இது தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வின் போது, சாணக்கியன் MP கடுமையாக கண்டித்துப் பேசியிருந்தார்.
முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக சாணக்கியன் பாராளுமன்றில் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் அவரை பேசவிடாமல் தடுக்க முயன்ற போது “ஹாஜியார் வாயை மூடுங்கள்” எனக் கூறி “இன்று தான் இவர் பாராளுமன்றில் வாய் திறந்ததை பார்க்கிறேன்” என தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் வரலாற்றில் முதன் முறையாக மர்ஜான் பளீல் அவர்கள் பாராளுமன்றில் உரையாற்றினார்.
அப்போது அவரும் சாணக்கியனுக்கு தனது உரையில் பதில் அளித்திருந்தார்.
இன்று மு.க பிரதித் தலைவரும் எம்.பி யுமான ஹரீஸ் சாணக்கியனுக்கு கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் முன்வைத்தமையை அவதானிக்க முடிந்தது.