ஆசிய−பசுபிக் சுற்றாடல் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக தென் கொரியா செல்லும் நோக்கில் நேற்றிரவு (03) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத் தந்த சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்கவிற்கு அதிகாரிகள் விமானத்தில் ஏற இடமளிக்க மறுத்துள்ளனர்.
கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட அட்டையை எடுத்து வராததை அடுத்தே, அதிகாரிகள் விமானத்தில் ஏற, அவருக்கு இடமளிக்கவில்லை என தெரியவருகின்றது.
மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக அவர், நேற்றிரவு 8:30 அளவில் விமான நிலையத்திற்கு பிரசன்னமாகியுள்ளார்.
டுபாய் வழியாக தென்கொரியா செல்ல, எமிரேட்ஷ் விமான சேவைக்கு சொந்தமான EK-653 விமானத்தில் பயணிப்பதற்காகவே அவர் இவ்வாறு சென்றுள்ளார்.
எனினும், தனது தொலைபேசியில் படமெடுத்து வைத்திருந்த அட்டையை காண்பித்தை அடுத்து, அனில் ஜாசிங்கவிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.