நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் திவிநெகும அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை, எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க கொழும்பு மேல்நீதின்றம் இன்று (21) தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் இன்று (21) பரிசீலனைக்கு எடுக்கப்பட்டபோது, அதனை விசாரணைக்கு அழைக்கத் திகதியிடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, திவிநெகும திணைக்களத்திற்கு சொந்தமான 2 கோடியே 94 இலட்சம் ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகத் தெரிவித்து குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.