Our Feeds


Wednesday, October 27, 2021

Anonymous

தேர்தலுக்கு முன் Hero வாக பார்க்கப்பட்டவர் தற்போது Zero ஆகியுள்ளார். - உதயகுமார் MP விமர்சனம்

 



அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு" என்று தமிழ் மொழியிலே ஒரு பிரபல பழமொழி உள்ளது. 


இன்று நாட்டில் ஆட்சியில் உள்ள அராங்கத்தின் நிலையும் அதுதான். தேர்தலுக்கு முன்னர் அத்திப்பழம் போல அழகழகான வாக்குறுதிகளை அள்ளி வழங்கினர். மக்களும் அத்திப்பழம் வெளிபில் பார்க்க அழகாக இருக்கிறதே! என்று ஆசையில் வாக்களித்தனர். 


ஆனால், தேர்தல் முடிந்த பின் ‘அத்திப்பழத்தை பிட்டுப் பார்க்கும் போதுதான் அத்தனையும் புழு’ என்று தெரிந்துள்ளது. 69 லட்சம் மக்களின் கதை இன்று பரிதாபக் கதையாக மாறியது மாத்திரமன்றி 2.2 கோடி இலங்கை மக்களின் கதையும் மிக மிக பரிதாப கதையாக மாறியுள்ளது. 


ஆனால், இந்த அரசாங்கம் தங்களுடைய பிரச்சனைகளை மூடி மறைப்பதற்காக அரங்கேற்றும் வழமையான நாடகத்தை தற்போது அரங்கேற்றி வருகிறது. 


ஐக்கிய மக்கள் சக்தி என்ற எதிர்க்கட்சி இந்த அரசாங்கத்திற்கு தற்போது சிம்மசொப்பனமாக மாறி உள்ளதால் எதிர்க்கட்சிகளில் பிளவு இருப்பதாகவும் - எதிர்க் கட்சியில் இருப்பவர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.


ஆனால், உண்மையில் பிரச்சனைகளும் குழப்பங்களும் இருப்பது இந்த அரசாங்கத்திற்குள் - . இன்று அரசாங்கத்தில் பங்காளி கட்சிகள் முக்கிய அறிவிப்பை விடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் செயற்பாடுகளை பங்காளிக் கட்சிகள் பகிரங்கமாக விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர். அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் அமைச்சுக்களுக்கு நியமித்த அதிகாரிகள் மற்றும் செயலாளர்கள்

பதவி விளங்குகின்றனர். சிலர் பதவி நீக்கப்படுகின்றனர். ஒரு சில அமைச்சர்கள் கூட விரக்தியில் பதவி விலகுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிப்படையாக அரசாங்கத்தை விமர்சிக்க தொடங்கி விட்டனர்.

எனவே, அரசாங்கத்திற்கு உள்ளே இத்தனை - குழப்பங்களை வைத்துக்கொண்டு ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல’ இந்த அரசாங்கம் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறது. தற்போது 

தேர்தல் ஒன்று நடைப்பெற்றால் அரசாங்கம் படுதோல்வியடையும் என்று அவர்களுக்கே தெரியும்.

இன்று நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன இவற்றை கட்டுப்படுத்தவோ அல்லது குறைக்கவோ ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையால் முடியவில்லை அப்படி என்றால் ஒரு அரசாங்கம் ஜனாதிபதி பிரதமர் அமைச்சரவை இந்த நாட்டிற்கு எதற்கு? சீனி விலையை குறைப்பது, அரிசி விலையை குறைப்பது அரச தலைவரின் பொறுப்பு இல்லை என்றால் அரசாங்கம் எதற்கு?


எனவே, இந்த வருகின்ற வரவு செலவுத் திட்டத்தில் இந்த நாட்டு மக்களின் உடைய பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வெறும் பேச்சளவில் உள்ளது அதனால் அரசாங்கம் முன் வந்து நூறு ரூபாய் வரவு செலவு கொடுப்பனவை 500 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன் அதேபோன்று அரசு ஊழியர்கள் இன்று அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் கஷ்டப்படுகின்றனர் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கியது இந்த அரசாங்கம் அரச ஊழியர்கள் மீது அக்கறை செலுத்தும் அரசாங்கம் என்றால் வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை 15,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென நான் கேட்டுக்கொள்கின்றேன்.


ஏனேன்றால், அத்தியாவசிப பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் போது மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிக்கும் போது சம்பளம் அதிகரிக்க்ப்பட வேண்டிபது கட்டாயம் மட்டுமின்றி அதுதான் நடைமுறை.


நாட்டில் அரிசி விலையை கட்டுப்படுத்த முடியாமல் அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்கள் விருப்பப்படி அரிசி விலையை அதிகரித்த போது இந்த அரசாங்கம் சண்டியர் போல ஊடகங்களுக்கு பேசி வெளி நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்து 100 ரூபாய்க்கு குறைவாக வழங்குவோம் என சவால் விடுத்தது ஆனால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த அரிசியோ விலங்குகளுக்கு கூட உண்ண முடியாத அரிசி என்பது தெரியவந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் அரிசியின் விலை அதிகரித்துள்ளது.  


மீண்டும் சீனியின் விலை அதிகரிக்கும் என்ற நிலை காணப்படுவதோடு - சீனிக்கு மக்கள் வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதால் -  அதற்கும் மக்கள் வரிசையில் நிற்பதை காணமுடிகின்றது.


மேலும், வெளிநாட்டு நிறுவனமொன்றிற்கு எரிபொருள் கொள்வனவு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதால் நிச்சயமாக நாட்டில் எரிபொருட்களின் விலை அதிகரிக்க கூடும் காரணம் சந்தையில் விற்கப்படும் நேரடி விலைக்கு நம்மால் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாது நமது முகவர் நிறுவனம் அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யும் எனவே, உள்நாட்டு சந்தையிலும் எரிபொருளை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளப்படும். 


ஆகவே, இப்படியாக பொருட்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் - நாட்டில் பஞ்சம் பட்டினி உருவாவதை தவிர்க்க முடியாது. தற்போது கூட, கடைகளில் மக்கள் வரிசையில் நிற்பதை பார்க்கும் போது பஞ்சம் வந்து விட்டதோ? என்று எண்ணத்தோன்றுகிறது. 


ஆகவே, போகிற போக்கில் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் நாடு பஞ்சத்தில் தள்ளப்பட்டு ஆசியாவின் ஆச்சரியமாக மாறிவிடுமோ? என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது. 


அதனால் இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக நாடு முழுவதும் தற்போது ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன ஜனாதிபதி பிரதமர் நிதியமைச்சர் விவசாய அமைச்சர் என அனைவரையும் நாட்டு மக்கள் வீதியில் விரட்டி விரட்டி அடிப்பதை காணமுடிகிறது. உண்மையில் இந்த காட்சிகளை பார்க்கும்போது இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாக மாறிவிட்டதோ? என்று என்ன வேண்டியுள்ளது. 


நாட்டில் இதற்கு முன்னர் இப்படி அதிகாரத்தில் உள்ளவர்களை மக்கள் பொம்மைகள் கட்டி வீதிகளில் விரட்டி அடிப்பதை காணவில்லை.  சௌபாக்கியமான சுகத்தை உருவாக்குவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வீதியில் வைத்து அடித்து விரட்டப்படுவதை மிகவும் கவலையோடு பார்க்கக் கூடியதாக இருக்கிறது.


தேர்தலுக்கு முன் Hero வாக பார்க்கப்பட்டவர் தற்ப்போது Zero வாகியள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »