சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, சிவிலியன் ஒருவரை தாக்கி அவரது வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற முயலும் வீடியோவை ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
இரத்தினபுரி கிரியெல்ல வீதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கடந்த வாரம் சிவிலியன் ஒருவரை ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கிய சம்பவம் நடந்த நிலையில், இந்த புதிய சம்பவம் பதிவாகியுள்ளது.