Our Feeds


Thursday, October 14, 2021

Anonymous

இணையத்தினூடாக பண மோசடி செய்த இளைஞன் CIDயின் வளையில் வசமாக சிக்கினார்.

 



இணையத்தளத்தினூடாக பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பல்வேறுப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களின் வங்கி அட்டை இலக்கங்களை பயன்படுத்தி திட்டமிட்டு பண மோசடி செய்த சம்பவமொன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கண்டறியப்பட்டுள்ளது.


அரச வங்கியொன்றின் வங்கி அட்டை இலக்கங்கள் தொடர்பான பிரதான முகாமையாளரின் முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட தொடர் விசாரணைகளிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குருநாகல், தம்பொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவர் குற்றபுலனாய்வுப் திணைக்களத்தின் இணையக் குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபா் இன்ஸ்டகிராம் செயலி குழுவின் உதவியுடன் 3 தினங்களில் 29 போின் வங்கி அட்டைகளில் 114 முறைகள் இணையத்தளத்தினூடாக பணம் செலுத்தி பொருள் கொள்வனவு செய்துள்ளனா்.

ஒரு நாளில் 8 இலட்சத்து 71 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ள சந்தேகநபா்,  இரவு வேலைகளில்நாடு பூராகவுமுள்ள வங்கி கணக்குகளுக்கு சூட்சுமமாக ஊடுருவி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவனரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பல்வேறு தொழில்நுட்ப இயந்திரங்களும் இவரிமிருந்து கைபற்றப்பட்டுள்ளன. குறித்த இன்ஸ்டகிராம்  குழுவினூடாக, வெளிநாட்டு வங்கி கணக்குகளிலும் பணம் மோச செய்யப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதால், அந்த குழுவை இனங்காண்பதற்கான பரந்துப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் தற்போது குற்றபுலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

(திஸ்ஸ ரவிந்ர பெரேரா )

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »