உலகிலுள்ள முக்கிய அரசத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் இரகசிய தகவல்கள் பென்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் தற்போது வெளியாகியுள்ளன.
இதில் 35 அரசத் தலைவர்கள் உள்ளடங்குவதுடன், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 300க்கும் அதிகமான முக்கியஸ்தர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு வெளியாகியுள்ள பெயர் பட்டியலில் இலங்கை அரசியல்வாதி ஒருவரின் பெயரும் வெளியாகியுள்ளமை தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
முன்னாள் பிரதி அமைச்சராக பதவி வகித்த அரசாங்க குடும்பத்தைச் சேர்ந்த நிருபமா ராஜபக்ஸவின் பெயரும் இந்த பென்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் வெளியாகியுள்ளது.
ஆவணத்தை பார்வையிட :− https://www.icij.org/investigations/pandora-papers/power-players/?player=nirupama-rajapaksa