அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அதன் 11 கூட்டணி கட்சிகள் இவ்வாரம் அதிரடி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன.
அரசின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக மேற்படி 11 கட்சிகள், நேற்று முன்தினம் கொழும்பில் கூடி நடத்திய கலந்துரையாட லின்போது பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப் பட்டுள்ளன.
இவ்வாரம் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து தற்போதைய நிலைமை குறித்து பேச்சு நடத்துவதற்கும் இந்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதற்கப்பால் மேற்படி 11 கட்சிகளும் கூட்டாக இணைந்து எதிர்வரும் 29 ஆம் திகதி கோட்டே சோலீஸ் மண்டபத்தில் செய்தியாளர்களை மக்களையும் சந்திப் பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கெரவலப்பிட்டி மின் நிலைய பங்குகளை விற்பனை செய்தமை மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்த அரச உயர்மட்டத்தில் உரிய இடமளிக்கப்படாத காரணத்தினால் இந்த தீர்மானங்களை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மேற்படி கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் பிரமுகரொருவர் தெரிவித்தார்.