Our Feeds


Thursday, October 21, 2021

ShortNews Admin

BREAKING: மனிதர்களை சாப்பிடும் மிக ஆபத்தான “பிரானா“ மீன் வகைகள் இலங்கை நீர் நிலைகளில் கண்டுபிடிப்பு



இலங்கையிலுள்ள நீர் நிலைகளில் மனிதர்களை உட்கொள்ளும் ‘பிரானா’ எனப்படும் மிக ஆபத்தான மீன் வகைகள் உள்ளதெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த தகவலை வனஜீவராசிகள் திணைக்களத்தின் உற்பத்தி பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் அஜித்குமார தெரிவித்தார்.

ஏதோ ஒரு வகையில் இந்த மீன் வகைகள் இலங்கை நீர் நிலைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, மீன் வளர்ப்பு பிரிவின் மூத்த விஞ்ஞானி அஜித்குமார தெரிவித்துள்ளார்.

மனிதர்களை உட்கொள்ளும் ‘பிரானா’ எனப்படும் மிக ஆபத்தான மீன் வகைகளே இவ்வாறு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

‘பிரானா’ என்ற இந்த வகை மீன்கள் தியவன்னா ஓயா, களனி கங்கை மற்றும் பொல்கொட குளம் ஆகியவற்றில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பகுதிகளில் மீன் வளர்ப்பிற்கு மீன் குஞ்சுகள் விடப்பட்டபோது இந்த வகை இனத்தைச் சேர்ந்த மீன் கலந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீன்கள் ஊடாக இந்த அபாய மீன்களும் இலங் கைக்குள் வந்திருக்கலாம் அல்லது வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களின்போது குறித்த மீன்கள் வந்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »