இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஸ்ரிங்லா சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இந்தியாவுக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக அவர் இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தமிழனுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய வெளிவிவகார செயலாளர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பாரென வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர், இருதரப்பு உறவுகள்குறித்து பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதவிர ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, வடக்கிற்கான விஜயம் ஒன்றையும் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.