Our Feeds


Tuesday, October 12, 2021

Anonymous

ஆசிரியர் போராட்டம் இன்று கைவிடப்படும்?

 



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.


ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு அரசாங்கத் தரப்பிலிருந்து ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் நவம்பர் மாதம் தொடக்கம் மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், ஆசிரியர்களின் தொடர் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர்.

எனவே, பிரதமர் தலைமையில் இன்று இடம்பெறும் கலந்துரையாடலில் ஆசிரியர்களின் தொடர் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இன்று இடம்பெறவுள்ள ஆசிரிய தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் தீர்மானமொன்றுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »