உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 24 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு உயர் நீதிமன்றத்தினால் இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து கடந்த 2019ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, சந்தேகநபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றப்பத்திரிகையும் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்தகட்ட விசாரணைகள் எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.