டுபாய் மன்னர் ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் தனது முன்னாள் மனைவி மற்றும் அவரது சட்டத்தரணிகளை உளவு பார்க்க அவர்களின் தொலைபேசிகளை ஹெக் செய்ய உத்தரவிட்டார் என்று இங்கிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஹெக் செய்வதற்கு டுபாய் மன்னர் அல் மக்தூம் இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ உருவாக்கிய அதிநவீன ‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்டுத்தியுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.