முகக்கவசம் அணியுமாறு கூறியதால், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த நபரைத் தாக்கிய சம்பவமொன்று மீகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
மீகொடை புதிய வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இன்று (06) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர் முகக்கவசமின்றி எரிபொருள் நிலையத்துக்கு வருகை தந்துள்ளதுடன் அதன்போது அவரை முகக்கவசம் அணியுமாறு அங்கிருந்த பணியாளர் அவரை வலியறுத்தியுள்ளாா்.
அதனால், கோபமுற்ற சம்பந்தப்பட்ட நபர் இன்னுமொரு நபருடன் வந்து அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த நபரை தூக்கி, நிலத்தில் அடித்து தாக்கியுள்ளனர்.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளான நபர் பாதுக்கை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று மீகொடை பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.