கெரவலபிட்டி, யுகதனவி மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (24) பேச்சு நடத்த எதிர்பார்த்துக்களதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ளதுடன் அதன்போது இதுதொடர்பில் பேச்சு நடவடிக்கை எதிர்பாா்த்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
ஆளுங்கட்சியிலுள்ள 11 பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் இந்த கலந்துரையாடலொன்று நேற்று (23) இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்டார்.
பிரச்சினை அதிகரிக்கும்போது கலந்துரையாடல்களும் அதிகரிக்கும். எமது நிலைப்பாட்டைச் சரியான நேரத்தில் சரியானவர்களுக்கு அறிவிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரவலப்பிட்டி, யுனதனவி மின்நிலையத்தின் ஒரு பகுதியை 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அரசாங்கத்தின் ஆளுங்கட்சி உறுப்பினர்களால் முன்வைத்த கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டுள்ளாா். அதற்கமைய (24) இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் அமைச்சா் வாசுதேவ நானயக்கார இதுதொடர்பில குறிப்பிடுகையில்,
மின்நிலையம் தொடர்பான உடன்படிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம். இதுதொடர்பிர் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளோம். இன்னும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. அரசியல் தலைமைகளின் நிலைப்பாட்டுக்கமையவே இதுதொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.
ஜனாதிபதி இதுதொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஒப்புக்கொண்டால் இதுதொடர்பில் நாங்கள் கலந்துரையாடலுக்காக அவரை வட்புறுத்தபோவதில்லை. அவ்வாறு இல்லாவிட்டால் மக்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.